Notation Scheme

மருகே3லரா - ராகம் ஜயந்த ஸ்ரீ - marugElarA - rAga jayanta SrI

English Version
Language Version

பல்லவி
1மருகே3லரா ஓ ராக4

அனுபல்லவி
மருகே3ல சராசர ரூப
பராத்பர ஸூர்ய ஸுதா4-கர லோசன (ம)

சரணம்
அன்னி நீவனுசு அந்தரங்க3முன
தின்னகா3 வெதகி3 தெலுஸுகொண்டினய்ய
நின்னே கா3னி மதி3னென்ன ஜாலனொருல
நன்னு ப்3ரோவவய்ய த்யாக3ராஜ நுத (ம)


பொருள் - சுருக்கம்
ஓ இராகவா! அசைவன மற்றும் அசையாதனவற்றின் உருவத்தோனே! பராபரனே!
பரிதி மதியை கண்களாயுடையோனே! தியாகராசனால் போற்றப் பெற்றோனே!
மறைவேனய்யா?
யாவும் நீயென (எனது) உள்ளத்தினில் சரிவரத் தேடி தெரிந்துகொண்டேனய்யா;
உன்னையன்றி மனதில் மற்றவரை எண்ணவியலேன்; என்னைக் காப்பாயய்யா.

பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
மருகு3/-ஏலரா/ ஓ/ ராக4வ/
மறைவு/ ஏனய்யா/ ஓ/ இராகவா/


அனுபல்லவி
மருகு3/-ஏல/ சர/-அசர/ ரூப/
மறைவு/ ஏன்/ அசைவன/ அசையாதன/ உருவத்தோனே/

பராத்பர/ ஸூர்ய/ ஸுதா4-கர/ லோசன/
பராபரனே/ பரிதி/ மதி/ கண்களோனே/


சரணம்
அன்னி/ நீவு/-அனுசு/ அந்தரங்க3முன/
யாவும்/ நீ/ என/ உள்ளத்தினில்/

தின்னகா3/ வெதகி3/ தெலுஸுகொண்டினி/-அய்ய/
சரிவர/ தேடி/ தெரிந்துகொண்டேன்/ அய்யா/

நின்னே/ கா3னி/ மதி3னி/-என்ன/ ஜாலனு/-ஒருல/
உன்னை/ அன்றி/ மனதில்/ எண்ண/ இயலேன்/ மற்றவரை/

நன்னு/ ப்3ரோவு/-அய்ய/ த்யாக3ராஜ/ நுத
என்னை/ காப்பாய்/ அய்யா/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)

மேற்கோள்கள்
1மருகே3லரா - மறைவு ஏனய்யா? - 'தெர தீயக3 ராதா3' எனும் கௌ3ளிபந்து கீர்த்தனையில் 'மதம்' (தற்பெருமை) மற்றும் 'பொறாமை' எனும் உட்திரைகளை (மறைவுகளை) ஏன் விலக்காயோ என்று தியாகராஜர் இறைவனை இறைஞ்சுகின்றார்.

விளக்கம்
பராபரன் - யாவற்றிற்கும் அப்பாற்பட்டவன்
Top