Notation Scheme

மனவினாலகிஞ்ச - ராகம் நளின காந்தி - manavinAlakinca - rAga naLina kAnti

English Version
Language Version

பல்லவி
1மனவினாலகிஞ்ச 2ராத3டே
மர்மமெல்ல தெல்பெத3னே மனஸா

அனுபல்லவி
4னுடை33ராம சந்த்3ருனி
கருணாந்தரங்க3மு தெலிஸின நா (ம)

சரணம்
4கர்ம காண்ட3 5மதாக்ரு2ஷ்டுலை4
3ஹன சாருலை கா3ஸி ஜெந்த33
கனி மானவாவதாருடை3
6கனிபிஞ்சினாடே3 நட3 த்யாக3ராஜு (ம)


பொருள் - சுருக்கம்
மனமே!

பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
மனவினி/-ஆலகிஞ்ச ராத3டே/
வேண்டுகோளை/ கேளாயோ அடியே/

மர்மமு/-எல்ல/ தெல்பெத3னே/ மனஸா/
மருமத்தை/ யெல்லாம்/ தெரிவிக்கின்றேனடி/ மனமே/


அனுபல்லவி
4னுடை3ன/ ராம சந்த்3ருனி/
மேதகு/ இராமசந்திரனின்/

கருணா/-அந்தரங்க3மு/ தெலிஸின/ நா/ (ம)
கருணை/ யுள்ளத்தினை/ யறிந்த/ எனது/ வேண்டுகோளை...


சரணம்
கர்ம/ காண்ட3/ மத/-ஆக்ரு2ஷ்டுலை/ ப4வ/
கருமத்து/ பாலின்/ கோட்பாடுகளினால்/ ஈர்க்கப்பட்டு/ பிறவியெனும்/

3ஹன/ சாருலை/ கா3ஸி/ ஜெந்த33/
அடவியில்/ உழன்று/ (மக்கள்) துயர்/ அடைய/

கனி/ மானவ/-அவதாருடை3/
கண்டு/ மனித/ அவதாரமெடுத்து/

கனிபிஞ்சினாடே3/ நட3த/ த்யாக3ராஜு/ (ம)
காண்பித்தானே/ நடத்தையினை/ தியாகராசனின்/ வேண்டுகோளை...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - மனவினாலகிஞ்ச - மனவாலகிஞ்ச - மனவ்யாலகிஞ்ச : 'மனவாலகிஞ்ச' என்பது முற்றிலும் தவறாகும். பல இசைக் கலைஞர்கள் 'மனவ்யாலகிஞ்ச' என்று பாடுகின்றனர். 'மனவினாலகிஞ்ச' என்று எல்லா புத்தகங்களிலும் கொடுக்கப்பட்டிருப்பதாலும், 'மனவ்யாலகிஞ்ச' என்பது சரியான சொல்லல்ல என்பதனாலும், இச்சொல் (மனவ்யாலகிஞ்ச) திணிக்கப்பட்டதாகக் கருதுகின்றேன்.

3 - ராம சந்த்3ருனி - ஸ்ரீ ராம சந்த்3ருனி
Top

மேற்கோள்கள்
4 - கர்ம காண்ட3 - கருமத்துப் பால் - மறைகளில் சடங்கு முறைகள் அடங்கிய பகுதி. கீதையில் (அத்தியாயம் 2, செய்யுள் 42 - 44) கண்ணன் பகர்வது -

பார்த்தா! இன்பங்களிலும், அதிகாரத்திலும் மிக்கு பற்றுடையோரின் மனத்தினில் திடமான எண்ணங்களெதுவும் காணப்படுவதில்லை. அவர்களின் பகுத்தறிவு, மெய்யறிவு அற்றோரின் அழகிய சொற்களினால் கவரப்படுகின்றது. இச்சைகள் மிகுந்த அவர்கள், வானுலகத்தினை உயர்ந்த குறிக்கோளாகக் கொண்டு, மறைகளின் கவர்ச்சியான சொற்களினால் ஈர்க்கப்பட்டு, மற்றெதுவும் இல்லையென்று பகர்கின்றனர். பலவிதமான கருமங்களைப்பற்றியும் அதனால் ஏற்படும் இன்பம் மற்றும் அதிகாரம் ஆகியவற்றினைப் பற்றியே அவர்களின் அழகிய சொற்கள் உள்ளன. இவையே (இந்த கருமங்களே) பிறவிக்கடலில் திரும்பத்திரும்ப பிறந்து உழல வைக்கின்றன.
(ஸ்வாமி ஸ்வரூபானந்தாவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்.)

கரும காண்ட விளக்கம் காணவும். Top

விளக்கம்
2 - ராத3டே - அடியே - மனத்தினை பெண்பாலில் அழைக்கின்றார்

5 - மதாக்ரு2ஷ்டுலை - கோட்பாடுகளினால் ஈர்க்கப்பட்டு - வானுலக இன்பங்கள் கிட்டுமென

6 - கனிபிஞ்சினாடே3 நட3 - காண்பித்தானே நடத்தையினை - ராமனைப்பற்றிய காஞ்சி மாமுனிவரின் விளக்கத்தினைக் காணவும்
Top