Notation Scheme

எந்து3 பா3யரா - ராகம் த4ன்யாஸி - endu bAyarA - rAga dhanyAsi

English Version
Language Version

பல்லவி
எந்து3 பா3யரா த3ய இன குல 1திலகா3ய (எ)

சரணம்
சரணம் 1
இந்து3 வத3ன குந்த3 ரத3ன மந்த3ர த4ர நீ த3ய (எ)


சரணம் 2
ஸா1ந்த பூ4ஷ ப4க்த போஷ ஸ1ரணு ஸே1ஷ ஸா1யி (எ)
சரணம் 3
ஸ்1ரித ஸ1ரண்ய ஸுர வரேண்ய க்ரு2த ஸு-புண்ய த4ன்ய த3ய (எ)
சரணம் 4
நாக3 ராஜ த4ர நுதாஜ த்யாக3ராஜ 2வரதா33ய (எ)


பொருள் - சுருக்கம்

பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
எந்து3/ பா3யரா/ த3ய/ இன/ குல/ திலகா/ த3ய/ (எ)
எங்கு/ போனதய்யா/ அருள்/ பரிதி/ குலத்திலகமே/ அருள்/ (எங்கு)


சரணம்
சரணம் 1
இந்து3/ வத3ன/ குந்த3/ ரத3ன/ மந்த3ர/ த4ர/ நீ/ த3ய/ (எ)
மதி/ முகத்தோனே/ முல்லை/ பற்களோனே/ மந்தர மலையை/ சுமந்தோனே/ உனது/ அருள்/ எங்கு...


சரணம் 2
ஸா1ந்த/ பூ4ஷ/ ப4க்த/ போஷ/ ஸ1ரணு/ ஸே1ஷ/ ஸா1யி/ (எ)
மனவமைதியை/ அணிவோனே/ தொண்டரை/ பேணுவோனே/ (நீயே) புகல்/ அரவணை/ துயில்வோனே/
சரணம் 3
ஸ்1ரித/ ஸ1ரண்ய/ ஸுர/ வரேண்ய/ க்ரு2த/ ஸு-புண்ய/ த4ன்ய/ த3ய/ (எ)
சார்ந்தோர்/ புகலே/ வானோர்/ வணங்கத் தக்கோனே/ செய்தோருக்கு/ நல்வினை/ பேறருள்வோனே/ அருள்/ எங்கு...
சரணம் 4
நாக3/ ராஜ/ த4ர/ நுத/-அஜ/ த்யாக3ராஜ/ வரதா3/ த3ய/ (எ)
அரவு/ அரசனை/ யணிவோன்/ போற்றும்/ பிறவாதவனே/ தியாகராசனுக்கு/ அருள்வோனே/ அருள்/ எங்கு...


குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - திலகா - திலக.
2 - வரதா3 - வரத3.
Top

மேற்கோள்கள்

விளக்கம்
மனவமைதியை அணிவோனே - மனவமைதியே அணிகலனாக,
அரவரசன் - சேடன்
அரவரசனை அணிவோன் - சிவன்
Top